Jul 9, 2007

பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள்.
பரங்கிப்பேட்டை ஜி.நிஜாமுத்தீன்.
இஸ்மவேல் (இறைத்தூதர் இஸ்மாயீல்) அவர்களின் வரலாற்றை மறைத்த கிறிஸ்த்தவ உலகம்.

ஆப்ரஹாமின் மூத்த மகன் இஸ்மாயீல் (பைபிளில் இஸ்மவேல்) இந்த இஸ்மவேலின் வம்சத்தில் தான் முஹம்மத் (ஸல்) என்ற இறைத்தூதர் அவர்கள் பிறக்கிறார்கள். கிறிஸ்த்தவ உலகம் முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகன்றது. மதகுருக்கள் அந்த அளவிற்கு அந்த மக்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டு வருகின்றார்கள். என்றாலும் வரலாறு இஸ்லாமிய வளர்ச்சியை தன்னுல் பதித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

பைபிள் கூறியுள்ள இஸ்மவேல் பற்றிய விபரங்களை ஊன்றி கவனித்தால் முஹம்மத் அவர்களின் தத்ரூபம் தெளிவாக புரிந்து விடும். இஸ்மவேல் பற்றி மதகுருக்களி்ன் பயத்தால் பைபிளில் ஏற்பட்ட மாற்றமும் விளங்கும்.

ஆப்ரஹாமின் முதல் மகனான இஸ்மவேலைப் பாராட்டி பைபிளில் பல வசனங்கள் உள்ளன.

இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20)

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பேத் தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்.

தன் மகன் குறித்து சொல்லப்பட்ட இந்தக் காரியம் அபிராமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.

அப்போது தேவன் அபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப் பெண்ணையும் குறித்து சொல்லப்பட்டது உனக்கு துக்கமாயிருக்க வேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்கு சொல்வதெல்லாவறறையும் கேள்.

அடிமைப் பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால் அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

அபிரகாம் அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தித் தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின் மேல் வைத்து பிள்ளையையும் ஒப்புக் கொடுத்து அவளை அனுப்பி விட்டான். அவள் புறப்பட்டுப் போய் 'பெயர்செபா'வின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்த பிறகு அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று எதிரே அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சப்தமிட்டு அழுதாள்.

தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே. பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்போது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு போய் துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள்.

தேவன் பிள்ளையுடன் இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.

அவன் பாரான் வராந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்தாலாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணி வைத்தாள். (ஆதியாகமம் 21:10 முதல் 21:21வரையுள்ள வசனங்கள்)

இந்த பைபிள் வசனங்களை வாசிக்கும் எவரும் இஸ்மவேலின் சிறப்பை அறிந்துக் கொள்ளலாம்.

தேவன் பிள்ளையுடன் இருந்தார் என்ற வசனமும் பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளைக்கு தேவன் நீரூற்றை உருவாக்கிக் கொடுத்ததும் (இந்த நீரூற்றுதான் அன்றிலிருந்து இன்றுவரை மக்காவில் ஜம்ஜம் என்ற பெயருடன் வற்றாமல் இருக்கின்றது) இஸ்மவேலின் ஜாதியை பல்கி பெருகசெய்வேன் என்ற தேவனின் வார்த்தைகளும் அரேபிய சமுகத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றது.

இந்த பைபிள் வசனங்களை அப்படியே நம்பினால் இஸ்மவேலின் வழித்தோன்றலாக வந்த முஹம்மத் அவர்களும் சிறப்புப் பெற்றுவிடுவார்களே என்றஞ்சிய பவுலின் கிறிஸ்தவ குருமார்கள் பிற்காலத்தில் பைபிளில் சில வசனங்களை சேர்த்துள்ளனர்.

பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி்: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். நீ குமாரனைப் பெறுவாய் கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டப்படியினால் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.

அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12)

இந்த வசனங்களில் கூறப்படுவது உண்மையென்றால் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்கள் பொய்யாகி விடும். இஸ்மவேல் துஷ்டனாகவும் மனிதகுல விரோதியாகவும் இருந்தால் கர்த்தர் இத்துனை சிறப்புகளை இஸ்மவேலுக்கு வழங்குவாரா...

இஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது நுழைக்கப்பட்டிருக்கின்றது.

இல்லை என்று கிறிஸ்த்தவ மதகுருக்கள் மறுத்தால் இஸ்மவேல் பற்றி தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட வார்த்தைகளை அவர்கள் மறுத்தவர்களாகி விடுவார்கள்.

இஸ்மவேலின் சிறப்பை மறுக்க கிறிஸ்த்தவ மதகுருக்கள் கையாண்ட மற்றொரு வரலாற்று புரட்டலையும் பார்ப்போம்.

தேவனுக்கு ஆப்ரஹாம் பலியிட துணிந்தது இஸ்மவேலையா.... ஈசாக்கையா.....

ஆப்ரஹாம் இஸ்மவேலைதான் கர்த்ருக்காக பலியிட துணிந்தார் என்று கிறிஸ்த்தவ உலகம் நம்பினால் இஸ்லாத்தின் சிறப்பையும் முஹம்மத் அவர்களின் தூதுத்துவத்தையும் நம்பவேண்டும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக பைபிள் வசனத்தையும் காட்டுகிறார்கள்.
ஆனால் பைபிள் வசனங்களை ஊன்றி கவனித்தலே பலியிட நாடியது ஈசாக்காக இருக்க வாய்ப்பில்லை இஸ்மவேலைதான் பலியிட முடிவெடுத்துள்ளார் என்பதை விளங்கலாம்.

இது குறித்து குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு வருவோம்.

(இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102 )

இந்த குர்ஆன் வசனம், ஆப்ரஹாம் பலியிட முடிவெடுத்தது இஸ்மவேலைதான் என்று தெளிவாக அறிவிக்கின்றது. குர்ஆனை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று வலிய அவர் பெயரைத் திணித்துள்ளார்கள்.

பைபிள் என்ன சொல்கின்றது?

அப்போது அவர்: உன் புத்திரனும் உன் ஏக சுதனும், உன் நேசக்குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கு நான் உனக்கு குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனை தகனபலியாக பலியிடு என்றார் (ஆதியாகமம் 22:2)

இந்த வசனத்தில் பலியிட கர்த்தர் சொன்னது ஈசாக்கைதான் என்று வருகின்றது. ஆனால் பைபிளின் இந்த வசனத்தையும் இதே அத்தியாயத்தில் இது குறித்து வந்துள்ள மற்ற வசனங்களையும் ஊன்றி கவனிக்கும் போது இஸ்மவேல் என்ற பெயர் எடுக்கப்பட்டு ஈசாக் என்ற பெயர் அங்கு திணிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம்.

எப்படி?

நாம் குறிப்பிட்டுள்ள இந்த தகனபலி வசனத்தில் கர்த்தர் 'உன் புத்திரன்' 'ஏகசுதன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 'ஏகசுதன்' என்றால் ஒரேமகன் என்று பொருள்.

உன்புத்திரனாகிய ஒரேமகனைப் பலியிடு என்பது கர்த்தரின் உத்திரவு. இந்த சம்பவம் நடக்கும் போது ஆப்ரஹாமிற்கு ஈசாக்கு மட்டும் தான் மகனாக இருந்தாரா... நிச்சயம் இல்லை. ஈசாக்கிற்கு முன்பே இஸ்மவேல் பிறந்து விட்டார்.

ஆகார் அபிராமுக்கு இஸ்மவேலை பெற்றபோது அபிராம் என்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதியாகமம் 16:16)

தனது எண்பத்தாறாவது வயதில் ஆப்ரஹாமிற்கு முதல் குழந்தையான இஸ்மவேல் பிறக்கின்றார்.

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.(ஆதியாகமம் 21:5)

இந்த இரண்டு வசனங்களில் இருக்குழந்தைகளுக்கும் 14 ஆண்டுகள் இடைவெளி இருந்ததை விளங்கலாம். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தகனபலி பற்றி கர்த்தர் சொல்லி இருந்தால் நிச்சயமாக 'ஏகசுதன்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க முடியாது.

ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது?

இந்தக் கேள்வியைக் கேட்டால் கிறிஸ்த்தவ போதகர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகின்றது. 'இஸ்மவேல் ஆகாருக்கு பிறந்தவர், ஆகார் ஒரு அடிமைப் பெண், எனவே ஆகாருக்கு பிறந்தக் குழந்தையை சொந்தக் குழந்தையாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும்.

இதுதான் அவர்களின் பதில் என்றால் அதற்கான விளக்கத்தையும் நாம் பார்த்து விடுவோம்.

ஒருவன் எந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தகப்பனாவான். இதுதான் உலக நியதி. பெண்ணின் விருப்பமில்லாமல் பாலியல் வல்லுறவில் ஒருவன் ஈடுபட்டு அவள் கர்ப்பம் தரித்தால் கூட நீதிமன்றம் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தந்தை என்று தீர்பளிக்கும்.

ஆகார் அடிமைப் பெண்ணாய் இருந்து விட்டுப் போகட்டும். அந்தப் பெண் கர்ப்பம் தரிப்பதற்கு காரணமாக இருந்தது யார். ஆப்ரகாம் அந்தப் பெண்ணுடன் கூடி அதனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார் என்று தெளிவாக தெரிந்த பிறகும் அது ஆப்ரஹாமின் குழந்தை அல்லவென்று எப்படி கூற முடியும்.

இஸ்மவேல் அடிமைப் பெண்ணுக்கு பிறந்ததால் அவரை மகன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கிறிஸ்த்தவ உலகம் வியாக்யானம் பேசினால் அதையும் பைபிள் மறுத்து விடுகின்றது.

அபிரகாம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்த பின்பு ஆபிரகாமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அழைத்து அவளை தன் புருஷனாகிய ஆபிரகாமுக்கு மறுமணையாட்டியாக் கொடுத்தாள். (ஆதியாகமம் 16:3)

சட்டப்படி இரண்டாம் மனைவியாக ஆகாரை முதல் மனைவியே தேர்ந்தெடுக்கின்றார். ஆகார் மனைவி என்ற அந்தஸ்த்தில் வந்த பிறகே ஆபிரகாம் அந்த மனைவியுடன் சேர்ந்து இஸ்மவேலை பெற்றெடுக்கிறார்.

கர்த்தர் எந்த ஒரு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின் மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை தன் மகனல்ல என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆப்ரகாமின் மனநிலையை கர்த்தர் எப்படி வெளிபடுத்துகிறார் என்று பாருங்கள்.

ஆப்ரகாமுடைய நுனித்தோல் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் பதிமூன்று வயதாயிருந்தான். (ஆதியாகமம் 17:23-25)

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.

தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. (ஆதியாகமம் 21:10-11)

இஸ்மவேலை அபிரகாமும் - கர்த்தரும் சொந்த மகன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக மத குருக்கள் சொன்னால் அதை கிறிஸ்த்தவ அறிவாளிகள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

நாம் இதில் எடுத்துக் காட்டியுள்ள பைபிள் வசனங்கள் அதற்கான விளக்கங்கள் இவற்றை நிதானத்தோடு ஊன்றி படிக்கும் யாவரும் இஸ்லாத்திற்கான அழைப்பின் வாசல் பைபிளில் இருக்கின்றது என்பதை கண்டுக் கொள்வார்கள்.

எந்த தேவன் மோசேயை அனுப்பினாரோ எந்த தேவன் இயேசுவை அற்புதமான முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பினாரோ அதே தேவன் தான் முஹம்மத் அவர்களை இஸ்மவேலின் வம்சாவழியில் பிறக்க செய்து இறைத்தூதராக்கி அவரைப் பின்பற்ற சொல்லியுள்ளான்.

இயேசுவை ஏற்போம் முஹம்மதை புறக்கணிப்போம் என்று யாராவது முடிவெடுத்தால் அவர் முஹம்மதை புறக்கணிக்கவில்லை. மாறாக இயேசுவை அனுப்பிய அந்த தேவனைப் புறக்கணிக்கிறார் என்பதே உண்மையாகும். கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்திப்பார்களா...?

1 comment:

தமிழ் சமயம் said...

குர் ஆன் புகழும் ஈசாக்கு

உமர் அண்ணாவின் பதிலுக்கு பின் எனக்கும் பதில் எழுத ஆசை வந்தது.உமர் அண்ணா நான் எழுதும் பதில் சரியாக இருந்தால் வேறு தளங்களிலும் பதியுங்கள்.


இது தான் இஸ்லாம் தளம் சொல்லும் போது ஏதோ பைபிள் மட்டும் தான் ஆபிரஹாமின் சந்ததி ஈசாக்கின் மூலம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததி என்று சொல்கிறது என்பது போல் எழுதியிருக்கிறார்கள்.கீழே குரானின் வசனங்களை தருகிறேன்.முதலில் குரான் கூறும் இஸ்மயிலையும்,ஈசாக்கையும் நான்கு பிரிவாக பிரிக்கலாம்.

1,நபித்துவம்

2, ஆபிரஹாமின் மகன்கள் இஸ்மவேல்,ஈசாக்கு

3,ஆபிரஹாமின் மகன் இஸ்மவேல்

4,ஆபிரஹாமின் மகன் ஈசாக்கு

1,நபித்துவம்

இதில் எல்லா நபிகள்(தீர்க்கதரிசிகள்) பெயர்களும் வரும் போது இதில் இஸ்மவேல்,ஈசாக்கு பெயரும் வரும்.இந்த மாதிரியுள்ள குரான் வசனங்கள்



(2:136)
قُولُواْ آمَنَّا بِاللّهِ وَمَآ أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَقَ وَيَعْقُوبَ وَالأسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
(முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.


(3:84)
قُلْ آمَنَّا بِاللّهِ وَمَا أُنزِلَ عَلَيْنَا وَمَا أُنزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَقَ وَيَعْقُوبَ وَالأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(4:163)
إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإْسْحَقَ وَيَعْقُوبَ وَالأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
(6:86)
وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلاًّ فضَّلْنَا عَلَى الْعَالَمِينَ
இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

(19:54)
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَّبِيًّا
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
(21:85)
وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ كُلٌّ مِّنَ الصَّابِرِينَ
இன்னும்; இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
(38:48)
وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِّنْ الْأَخْيَارِ
இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.

இந்த வசனங்களில் மற்ற நபிமார்கள்(தீர்க்கதரிசிகள்) பெயர் சொல்லப்படும் போது இஸ்மாவேலையும் ஒரு தீர்க்கதரிசியாக பாவித்து பெயர் பட்டியல் வருகிறது.

2, ஆபிரஹாமின் மகன்கள் இஸ்மவேல்,ஈசாக்கு

இஸ்மவேல்,ஈசாக்கு ஆகிய இருவரும் ஆபிரஹாமின் வாக்குத்தத சந்ததி என்னும் தோற்றத்தை தரும் குரான் வசனங்கள்

(2:133)
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர்.


(14:39)
الْحَمْدُ لِلّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَقَ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاء
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.

3,ஆபிரஹாமின் மகன் இஸ்மவேல்

ஆபிரஹாமின் மகன் இஸ்மவேல் என்னும் தோரனையில் குரானில் வரும் வசனங்கள்

2:125
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْناً وَاتَّخِذُواْ مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
(இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்

2:127
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறினர்).
(2:133)

4,ஆபிரஹாமின் மகன் ஈசாக்கு

ஆபிரஹாமிடம் தேவன் வாக்குத்தத்தம் செய்த ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததி ஈசக்கின் சந்ததியே என்பதற்கான குரான் வசனங்கள்

وَوَهَبْنَا لَهُ إِسْحَقَ وَيَعْقُوبَ كُلاًّ هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ وَمِن ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். (6:84)



وَامْرَأَتُهُ قَآئِمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنَاهَا بِإِسْحَقَ وَمِن وَرَاء إِسْحَقَ يَعْقُوبَ
அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாஃக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம். (11:71)




وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன்மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்." (12:6)






وَاتَّبَعْتُ مِلَّةَ آبَآئِـي إِبْرَاهِيمَ وَإِسْحَقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَن نُّشْرِكَ بِاللّهِ مِن شَيْءٍ ذَلِكَ مِن فَضْلِ اللّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَـكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَشْكُرُونَ
"நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல, இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. (12:38)


فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَهَبْنَا لَهُ إِسْحَقَ وَيَعْقُوبَ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا
(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். (19:49)


وَوَهَبْنَا لَهُ إِسْحَقَ وَيَعْقُوبَ نَافِلَةً وَكُلًّا جَعَلْنَا صَالِحِينَ
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம். (21:72)



وَوَهَبْنَا لَهُ إِسْحَقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتَابَ وَآتَيْنَاهُ أَجْرَهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ
மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார். (29:27)


وَبَشَّرْنَاهُ بِإِسْحَقَ نَبِيًّا مِّنَ الصَّالِحِينَ
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம். (37:112)


وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَى إِسْحَقَ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِ مُبِينٌ
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர். (37:113


وَاذْكُرْ عِبَادَنَا إبْرَاهِيمَ وَإِسْحَقَ وَيَعْقُوبَ أُوْلِي الْأَيْدِي وَالْأَبْصَارِ
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாஃக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக! (38:45)

முதல் பகுதியில் அனைத்து நபிகள்(தீர்க்கதரிசிகள்) பெயர் வரும்பொழுது இஸ்மாவேலும் ஒரு நபியாக சொல்ல படுவதை காணலாம்.இதற்கும் ஆபிரகாமின் மகன் இஸ்மாவேல் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இரண்டாவது பகுதி முதல் வசனத்தில் யாக்கோபு தன் மரண நேரத்தில் ஆபிரகாமின்,இஸ்மாவேலின்,ஈசாக்கின் தேவன் என்று சொல்லுவதாக வருகிறது.இதில் இஸ்மாவேல் ஆபிரகாமின் சந்ததி பட்டியலில் இடம் பெற்றாலும் தனித்தன்மை ஏதும் இல்லை.ஏன் என்றால் அவருக்கு பின் அவரின் மகனின் பெயர் அல்ல ஈசாக்கின் பெயரே உள்ளது.இரண்டாவது வசனத்தில் ஆபிரகாம் இறைவனை நோக்கி இஸ்மாவேல்,ஈசாக்கை தந்ததுக்காக நன்றி சொல்லுவதாக உள்ள வசனம்.இதிலும் இஸ்மாவேலின் சந்ததியை பற்றி ஒன்றும் இல்லை.

மூன்றாவது பகுதியில் வரும் சம்பவங்கள் வரலாற்று பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்று தெறியவில்லை.அப்படியே எடுத்துக்கொண்டாலும் அந்த ஆலயத்தை எடுத்துக்கட்ட உதவிய இஸ்மாவேலின் சந்ததியை ஆசீர்வதிப்பதாகவோ,அல்லது அவர் சந்த்தியில் ஒரு நபியை அனுப்புவதாகவோ இறைவன் வாக்கு பண்ணவில்லை என்பது அந்த வசனங்களில் இருந்து தெளிவு.
இந்த வசனங்களின் பின் பகுதியில் எங்கள் சந்த்தியில் ஒரு நபியை எழுப்பும் என்று ஆபிரகமும்,இஸ்மாவேலும் வேண்டிக்கொண்டதாக வந்தாலும் இவர்களுக்கு அடுத்தபடியாக இறைவனின் வாக்குத்தத்த பிள்ளையாக ஈசாக்கே பிறக்கிறார்.இஸ்மாவேலுக்கென்று ஒரு தனி சந்ததிக்கான வாய்ப்பாக அது இல்லை.


இந்த நான்கவது பகுதியில் வரும் வசனங்களில் நன்மாராயம்(வாக்குதத்தம்) செய்து பிறந்தவர் ஈசாக்கே என்பதில் குரான் தெளிவாகவே உள்ளது.அதனால் தான் தெறிந்தோ,தெறியாமலோ அதிகமான இடங்களில் இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் அதாவது ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்ற வரிசையையே பயன்படுத்துகிறது.(ஓரிரு இடங்களை தவிர)

மேலும் 19;49ல் ஆபிரகாம் இணைவைத்தவர்களை விட்டு விலகியவுடன் இஸ்மயிலை கொடுத்ததாக சொல்லியிருக்க வேண்டும் ஆனால் இந்த வசனம் அப்படி வராமல் ஈசாக்கையும் அவரின் மகன் யாக்கோபையும் நன்கொடையளித்தோம் என்றே வருகிறது.இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளுவது பைபிளில் ஆபிரகாமின் சந்ததி ஈசாக்கின் மூலம் வாக்கு(நன்மாராயம்)பண்ணப்பட்டது சொல்லப்படும் கருத்துக்கு குரான் முரண்படவில்லை என்பதே.


فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَهَبْنَا لَهُ إِسْحَقَ وَيَعْقُوبَ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا
(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். (19:49)


இன்னும் அதிகமாக குரானை படித்தால் இஸ்மவேலுக்கு அல்லா ஒரு தனி சந்ததி வழங்கினதகவே ஒரு வசனம் கூட இருப்பதாக தெறியவில்லை. இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் இஸ்மாவேலின் சந்ததியில் ஒரு நபிவருவார் என்று கூறும் வலைதளம் அதற்கு குரானின் ஆதாரத்தை இன்னும் வைக்கவில்லை.அதற்கு காரணமே குரான் இஸ்மாவேலின் சந்ததி என்று ஒன்றை காண்பிக்கவே இல்லை.கீழே உள்ள வசனங்களை நன்றாக வாசித்தால் அதன் உண்மை புரியும்.


(2:140)


أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَـقَ وَيَعْقُوبَ وَالأسْبَاطَ كَانُواْ هُودًا أَوْ نَصَارَى قُلْ أَأَنتُمْ أَعْلَمُ أَمِ اللّهُ وَمَنْ أَظْلَمُ مِمَّن كَتَمَ شَهَادَةً عِندَهُ مِنَ اللّهِ وَمَا اللّهُ بِغَافِلٍ عَم تَعْمَلُونَ
"இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நீச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே" என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக "(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை."

இந்த வசனம் யூதர்களையும்,கிறிஸ்தவர்களையும் கண்டிக்க அதாவது நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று யூதர்களும்,கிறிஸ்தவர்களும் சொந்தம் கொண்டாடினபடியால் அல்லா இந்த வசனத்தை இறக்குகிறார்.ஆனால் நாம் உற்று நோக்கவேண்டிய விசயம் என்னவென்றால் யூதர்களும்,கிறிஸ்தவர்களும் ஆபிரகாம் ,ஈசாக்கு,யாக்கோபின் சந்ததி நாங்கள் என்று கூறினார்கள் என்று அல்லா சொல்லாமல்
(இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் )என்று சொல்லுகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது அல்லாவின் கருத்து படி இஸ்மாவேலின் சந்ததி என்பது தனியே இல்லை.அவரையும் சேர்த்தே யூதர்களும்,கிறிஸ்தவர்களும் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்பதே.


முடிவாக அன்பான இஸ்லாமிய நண்பர்களே குரானில் ஒரு இடத்திலாவதும் ஆபிராகாமின் சந்ததி இஸ்மாவேலின் சந்ததி மூலமாக ஆசீர்வதிக்கபடும் என்று உள்ளதா?
கண்டிப்பாக இல்லை ஆபிரகாமின் சந்ததியாக இஸ்மாவேலை குரான் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.மாறாக ஈசாக்கே இப்ராஹீமின் நன்மாராயம்(வாக்குதத்தம்) பிள்ளை என்பதை குரான் விளக்குகிறது.உண்மையான ஈசாக்கின் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியை பற்றி அறிந்து கொள்ள நீங்கள் பரிசுத்த பைபிளை உள்ளம் உன்றி உண்மையாக படித்தாலே அன்றி விளங்கிக்கொள்ள முடியாது.ஒரு சில இஸ்லாமிய வலைபூக்களின் பிரச்சாரமோ,அல்லது ஒரு சில இஸ்லாமிய பிரச்சாரகர்கள் மூலமாகவோ இஸ்லாமியர்களுக்கு பைபிள் குறித்த தவறான கண்ணோட்டமே போய்சேர்கிறது.உண்மை ஒரு நாளும் மறைக்கமுடியாது நண்பர்களே.ஒரு நாளில் சத்தியம் வெளிப்படும். .

http://chittarkottai.com/quran/surawise.php