குழந்தையிடம் தொலைகாட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டது
1. சாதாரன குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக்காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக்காட்டிலும் அதிகமாகும்,(தூங்குவதைத்தவிர).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்வான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார்செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதைசம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்கின்றன.
குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:
1. தொலைக்காட்சி மூலை வளர்ச்சியை பாதிக்கிறது.
2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை, அவை விளம்பர நோக்கத்திற்காக தயார் செய்யப்படுகின்றன.
3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது, விளையாடுவது, பழகுவது, வீட்டு பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்முலமாக்குகிறது.
4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்பதினால், பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்தி, சகவாசமின்மை, முரட்டுத்தனம் ஆகிய பின்விளைவுகளை பெறுகின்றன.
வன்முறையும் தொலைக்காட்சியும்:
1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக்காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.
4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன, பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
5. பள்ளியில் சேருமுன் (pre-school) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது.
6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிக கெட்ட நடத்தைகளை வளர்க்கிறது.
7. நினைப்பதை அடைய, வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குறியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.
9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.
10. தொலைக்காட்சியில் வரும் உணவு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன, ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.
தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படி தீர்மானிப்பது:
1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது / அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள், அதாவது, வீட்டு பாடம் படிக்கும் முன் / எழுதும் நேரத்திற்கு முன், சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.
2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்காமை.
3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்
5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம், வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.
6. வீட்டு பாடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர், குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின், பதிவு செய்து, பிறகு காண்பிக்கலாம்.
7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று, இது வீட்டு பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும், குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும், டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையை தூண்டவேண்டும்,இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைபடுத்தியும் டிவி தொடர்கள் கான்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
"யாழினிது கேழினிது என்பர் மடையர் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்" என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள், ஆனந்தமடைவீர்கள்.
இது பற்றிய இன்னும் கூடுதல் அதிர்ச்சித் தகவல்களை 'முதிர் குழந்தைகள்' என்ற சிறப்புக் கட்டுரையில் நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.
2 comments:
பெற்றோர்க்கு மட்டுமில்லை,சகலருக்கும் தேவையான தகவல்(மட்டுமல்ல)அறிவுரை; எத்தனை பேர் இதனை கடைபிடித்து, தங்கள் பிள்ளைகலின் எதிர்காலத்தை காப்பாற்றப் போகிறார்கள்.
இன்று தவிர்க்கவே முடியாத அளவுக்கு வீடுகளில் தொலைக் காட்சிப் பெட்டி ஆக்கிரமித்து விட்டது. அதையும் குழந்தைகளின் எதிர் காலத்தைப் பாதிக்காத விதத்தில் பயன்படுத்துவது நல்ல பெற்றோருக்கு கடமை என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள்.
Post a Comment