கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு நாசர் மஹ்தனி (கேரளா) உட்பட 8 முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட, பொருளாதார உதவி செய்த, இறைவனிடம் பிரார்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் இதுதான் இஸ்லாம் இணையம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கோவை பாஷா உட்பட ஏராளமான முஸ்லிம்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்துள்ளது எப்படி என்று புரியவில்லை. சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பிலிருந்து பாஷா விடுதலை செய்யப்பட்டார். அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிப்பதற்கு முன் அவர் மீது அடுத்த குற்றச்சாட்டு தீர்ப்பு. .இந்தத் தீர்ப்பு 'சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு - விடுதலை தீர்ப்பு' ஒரு நாடகமோ என்ற சந்தேகத்தை எழுப்பி விட்டது.
முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாக நினைத்து விளையாடிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வரும் சில முஸ்லிம் இயக்கங்கள் வெட்கப்பட வேண்டும். சென்னை குண்டு வெடிப்பு வழக்கில் 'ஆதாரமில்லை' என்ற பாஷா வின் விடுதலை, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 'ஆதாரமில்லை' என்ற மஹ்தனியின் விடுதலை நியாயமானது என்று இருந்தாலும் எவ்வித ஆதாரமுமில்லாமல் அவர்கள் சிறைகளில் கழித்த தங்கள் வாழ்நாளுக்காகவும் அப்போது அவர்கள் பட்ட கஷ்டம் மற்றும் செலவீனங்களுக்காகவும் நஷ்டயீடு கோரி முஸ்லிம் இயக்கங்கள் போராட வேண்டும். மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர வேண்டும்.
சமுதாய பாதுகாப்பு இயக்கங்கள் முன் வருமா...
இதுதான் இஸ்லாம்குழுமம்
No comments:
Post a Comment